எம்மைப்பற்றி

அமைதியாக தன் நோக்கை ஈழத்தமிழரின் இதய நாதம் என்ற தாரக மந்திரம் என   மீண்டும் ஓர் புதிய பரி நாமமாக

லைக்கா ஐ பியிலும் இனி நீங்கள் பார்கலாம் என்ற நற்செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் STSதமிழ்Tv‌நிர்வாகத்தினராகிய நாம் பெருமைகொள்கிறோம்,

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தன்நோக்கில் பயணிக்கும் STSதமிழ்Tv‌க்கு ஆதரவுக்கரம் நீட்டியவர்களுக்கு STSதமிழ்Tv‌நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்து நிற்பதோடு இன்னும் ஓரு புதிய பரிமாணாத்தில் லைக்கா ஐ பியில் இணைந்த நற் செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக மிக மகிழ்வுகொள்கின்றது

அத்தோடு STSதமிழ்Tv‌யை லைக்கா ஐ பி யில் இணைத்து, எமது நோக்குக்காய் புதுக்களம் தந்த லைக்கா உரிமையாளர் தொழிலதிபர் சுபாஸ்கரன்

அவர்களுக்கு STSதமிழ்Tv‌யை லைக்கா ஐ பியில்இணைத்து எமது கலைஞர்கள் களம் விரிந்த உலகப்பந்தில்
STSதமிழ்Tv‌ சிறக்க புதுவழிதந்த தொழிலதிபர் சுபாஸ்கரன் அவர்களுக்கு STSதமிழ்Tv‌நிர்வாகத்தினர் நன்றி கூறி நிற்கின்றனர்.

கடந்த 25 .08 2018டில் இருந்து நீங்கள் லைக்கா ஐ பி இணைப்புள்ளவர்கள் STSதமிழ்Tv‌யைப்பார்க்கலாம்என்ற நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்வுகொள்கின்றனர் STSதமிழ்Tv நிர்வாத்தினர்,

எமது நோக்கு எம்மவர் படைப்புக்கான தனித்துவம்மிக்க களம் இது பல ஆண்டு நாம் ஊடகங்களிடம் கற்ற அடிச்சுவடாக எமது நெஞ்சில் எழுந்த சிந்தை இதற்காக நாங்கள் ஒன்றரைவருடம் பணியாற்றி அதில் வெற்றியும் கண்டுள்ளோம் அதற்கான காரணிகள் நீங்கள் என்பது சிறப்பு,

நமக்கு அல்லது நமது சமூகத்துக்கு நாம் செய்ய வேண்டிய பணிகளில் கலைக்கானபணியும் உண்டு நமது பிள்ளைகளை நாம் வளர்ப்பதுபோல் எமதுகலையையும் நாமேவளர்க்கவேண்டும் அல்லவா ?

அதனால் கலைஞர்கள் இணைவோம் எம்மவர்கலைதன்னை வளர்ப்போம்
என்ற இந்த வெற்றிக்கு புதிய அங்கீகாரம் கிடைத்ததுபோல் இப்போது எமது நிகழ்வுகள் லைக்கா ஐ பியிலும் என்ற மகிழ்வை பகிர்வதோடு இந்தத்தகவல்களை பார்ப்பவர்கள் உங்கள் உறவுகள், நட்புக்களுடன் பகிருங்கள் என்றும் அன்புடன் வேண்டி நிற்கிறோம்,

லைக்கா ஐ பியில் STSதமிழ்Tvஇணைக்க பலர்முயன்றார்கள் ஊடகச்செம்மல் மணிக்குரல்தந்த முல்லைமோகன்,சுவிஸ் செல்வாவீடியோ உரிமையாளர் செல்வா  அவர்கள் முயற்சிக்கும் நன்றி

நமது தொலைக்காட்சிக்கான சேவர் எனப்படுவது இளம் தலைமுறை ஊடகவியலாளர் சன்தோரா தொலைக்காட்சியின் நிர்வாகி யிடமே நாங்கள் எடுத்து அவரின் சேவரிலே எமது தொலைக்காட்சி செயல்படுகின்றது,சேவர் தந்த ஆரம்ப காலத்திலேயே நாங்கள் கதைக்கும்போது

சன்தோரா நிர்வாகி அருண் ஐேசுதாசன்எனக்கு கூறியிருந்தார்.

எமது தொலைக்காட்சியை STSதமிழ்Tvயை லைக்காவில் இரண்டு அல்லது முன்று மாதத்தில் இணைகலாம் என்று பின் பலதடவை அவருடன் தொழில் நுட்பம்பற்றிய சில விடையங்களை கதைத்ததோடு இதுபற்றிகதைக்கவில்லை

சென்றவாரம் அவரிருடன் கதைக்கும்போது நாங்கள் லைக்கா ஐ பியில் இணைக்க முயன்றோம் எல்லா விடையங்களும் அனுப்பிவிட்டோம் இன்னும் இணைக்கவில்லை என்று அவரிடம் கூறினேன்,

அதர்க்கு அவர் நான் ஆரம்பத்தில் உங்களுக்கு கூறியிருந்தேன் இரண்டு அல்லது மூன்று மாதம் செல்லட்டும் லைக்கா ஐ பியில் இணைத்து தருவதாக மறந்து விட்டீர்களா என்று

அப்போது தான் அவர்முன்பு சொன்னது நினைவு வந்தது நானும் சரி நீர் கூறியது போல் நீரே லைக்கா ஐ பியில் STSதமிழ்Tv‌ யை இணைத்துதாரும் என்று கூறி பொறுப்பை அவரிடமே விட்டேன் இரண்டு நாட்களில் லைக்கா ஐ பியில்STSதமிழ்Tv‌ இணைத்து தந்தமைக்காக தம்பி சன்தோர நிர்வாகி அருண் ஐேசுதாசன்அவர்களுக்கும்STSதமிழ்Tv‌ நிர்வாகத்தினரின் நன்றி வாழ்த்துக்கள்

அன்று தொட்டு இன்று வரை நண்பனாகவும் STSசின் அனைத்து கலைவிடையங்களிலும் பின் தொலைக்காட்சிக்கான கருத்தாடலிலும் சில வடிவமைப்பிலும் வரைகலைக் கலைஞராகவும் உறுதுணையாக நிற்கும்  ஸ்ரீதருக்கும் நன்றி

ஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளர்,தொழில்நுட்பவியலாளர்  14.ஆண்டுகளுக்கு முன் தமிழ் எம் ரிவி   இணையத்தொலைக்காட்சியை உருவாக்கிய அதன் இயக்குனர் என பன்முகம் கொண்ட என் வி சிவநேசன் அவர்களும் எம்முடன் கருத்தாடலிலும் செயல்பாட்டிலும் இணைந்து நிற்நிற்கும் அவருக்கும் நன்றி

ஆரம்பத்தில் இருந்து கருத்தாடலிலும் செயல்பாட்டிலும் STSதமிழ்Tv‌யோடு தோள்கொடுத்து நிற்கும் ஊடகவியலாளர் நண்பர் அறிவுப்பாளர் மணிக்குரல்தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் அவர்களுக்கும் நன்றி

STSதமிழ்Tv‌ சிறப்புற வேண்டும் என்ற நோக்கோடு தாயகத்தில் இருந்து முகநுால் உறவாக இணைந்து பல ஆண்டுகள் நட்புடன் நற்கருத்துதுகளுடன் எமது கலைக்காவும் எமது கலைஞர்கள் பதிவாகவும் தாமும் தாயகப்பதிவுடன் இணைந்துள்ள முல்லைஈஸ்வரம் இயக்குனர் நாடகப்பயிற்றுவிப்பாளர், யோகா பயிற்றுவிப்பாளர், மனோதத்துவ ஆலோசகர், பொதுப்பணியாளர் திரு குமாரு யோகேஸ் அவர்களுக்கும் நன்றி

அன்போடு எம்முடன் இணைந்து ஆர்வத்துடன் கலந்து தானும் எமது நோக்கோடு பயணிக்கும் ஓர் அன்பு உள்ளம்கொண்ட அறிவிப்பாளர், D Jஒலிபரப்பாளர் பொதுப்பாணியார் மனிதநேயர் அவைத்தென்றல் வல்லிபுரம் -திலகேஸ்வரனுக்கும் நன்றி
,

STSதமிழ்Tv‌ க்கான லோகோ முகப்பட்டைவேறுமாதிரி இருந்தால் சிறப்பென உரைத்த செல்வாவீடியோ இயக்குனர் தொழில்நுட்பவியலாளர், ஔிப்பதிவு ,DJ என பல்கலை வல்லுனர் தன்னிடம் இருக்கும் பதிவுகளையும்  தருவதுமட்டுமல்ல STSTamil சிறப்பாக இருக்வேண்டும் என்று STSTamil லோகோவை விதம் விதமாக வீடியோ குறும் பதிவுகளைத் தந்து  இதன் சிறப்பு நன்றாக வரவேண்டும் என்ற ஆவர்வத்துடன் தொழில் நுட்பக் கலந்துரையாடல் என கலைஞர் செல்வா வீடியோ இயக்குனருக்கும் நன்றி,

முகநுால் வழிவந்த எமது ஈழத்து உறவு இந்தியாவில் இருந்து ஊடகப்பணி, படப்பிடிப்பு தொழில்  நுட்பம், வரைகலைகள், நெற் தொலைக்காட்சி தொடர்பாளர் என பல்துறைசார் கலைஞன்  பிரதீபன் STSதமிழ்Tv‌ யின் லோகோ வடிவமைத்து தந்தமைக்காக நன்றி

அத்தோடு இத்தனை செயல்பாடுகள் இருந்தாலும் எம்மவர் தனிக்களத்துக்கய் பார்வை ஆளர்கள் ஆதரவாளர் என்று நீங்கள் இல்லாத பட்சத்தில் எதுவும் இல்லை அந்தவகையில் STSதமிழ்Tv‌ உறவுகளுக்கும் அனுசரணை வழங்கியோருக்கும் வழங்க இருப்போருக்கும் நன்றி கூறிநிற்கின்றனர் STSதமிழ்Tv‌ நிர்வாகம்

Today: 1

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.