STS தமிழ்த் தொலைக்காட்சியின்ஆறாவது ஆண்டுக்கான தமிழரசியின் வாழ்த்து

வாழ்த்து….! 💐💐💐

STS தமிழ்த் தொலைக்காட்சி
ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்து
ஆறாவது ஆண்டில் கால் பதிக்கும்
இவ்வேளை எனது நல்வாழ்த்துகள்….!

நிகழ்ச்சிகள் பலவற்றை இதில் அழகுற
வடிவமைக்கும் இயக்குனர் தேவா அண்ணா
உங்களுக்கும் உவந்து கூறுகின்றேன்
வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றிகள்….!

வீட்டுக் கடமையுடன் இதையும் சரிவரச்
செய்யும் உங்கள் சேவை கண்டு
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
மகிழ்கின்றேன் மெச்சுகின்றேன்….!

புலம்பெயர் தேசங்கள் மற்றும் தாயக
எம் தமிழ் உறவுகளை ஒருங்கிணைத்து
உறவுப்பாலமாக இத் தொலைக்காட்சியை
சிறப்பாக நடாத்தும் உங்கள் பணி
மென்மேலும் சிறந்து மிளிரட்டும்….!

வார்த்தைகள் தொடுத்து நான்
வாழ்த்துகள் சொல்கின்றேன்
வாழும் நாள்வரையும் சேவைகள் செய்திடுக
வேண்டும் உங்கள் அளப்பரிய சேவை
புலம்பெயர் மண்ணில் வாழ்த்துகின்றேன் புகழ் ஓங்க விண்ணில்….!

 தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர்,பெண்ணே நீ பேசவா தொகுப்பாளர் (லண்டன்)

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert