கவிஞர் கீதா ரவிஅவர்களின் STSதொலைக்காட்சிக்கான வாழ்த்து!

தேவமுல்லைச் செடியின்
ஆழவேர்களின் வளர்ச்சியில்
பெருங்கொடிகள் படர்ந்த
ளுவுளு தொலைக்காட்சிப் பூங்காவனம் !

கொடிகள் முழுவதும் கலைஞர்ப்பூக்கள்
இலைகள் மறைத்த கலைஞர்ப்பூக்களையும்
மணம் பரப்ப வைக்கும் மகோன்னத பூங்காவனம்
ஈழக்கலை நாதம் உலகெங்கும் பரப்பியின்று
ஏழாண்டு அகவையில் நிறைக்கின்றது.

ஏழாண்டு அல்ல இன்னும் எழுநூறு ஆண்டுகள்
ஏறுநடை போடும். ஏராளம் கலைக்குயில்கள்
வான்வெழிக் காணொளியில் பறந்து
வர நேசக்கரம் நீட்டி நீண்ட சேவை
உவந்தளிக்கும்.ளுவுளுவாழிய வாழிய
ளுவுளு தமிழ்தொலைக்காட்சி தேவமுல்லைப்பூங்காவனம்!!! வாழிய வாழிய தேவமுல்லைப் பெருவேர்கள் சேவை வாழிய வாழிய !!!

கலைஞர் வில்லுப்பாட்டு ராஜன் கலைஞர்கள் சங்கமம் நிகழ்வினை பார்த்தேன் பூரிப்படைந்தேன் கணோஷ்

கலைஞர்கள் சங்கமம் நிகழ்வினை பார்த்தேன் பூரிப்படைந்தேன் பழமையான பாரம்பரிய கலைகளுக்கு ஈடுஇணை ஏதுமில்லை இன்றைய கலைஞர் வில்லுப்பாட்டு ராஜன் வில்லுப்பாட்டை காத்துவரும் மாபெரும் கலைஞர் அவர்பாடும் தொனியின் கம்பீரம் அவருக்கு இது ஒருகொடையே கலைமீது நிறைவான காதல் கொண்டு பயணிக்கின்றார் எதையும் நேருக்கு நேர்பேசும் கலையாற்றல் கொண்டவர் என்பதை சிறப்பான நல்லமனிதர் கலைகளை காத்துவரும் பெரியோர்களில் ஒருவர் தொகுப்பாளரின் கேள்விகளுக்கு அழகாகவும் சுவையாக பதிலாகவும் பாடலாகவும் பாடிக்காட்டினார் நிறைவாக கலைஞர்களையும் மதிப்பிட்டிருந்தார் கலைமீதும் கலைஞர்கள் மீதும் நீங்கள் கொண்டிருந்த அன்பைக்காட்டுகிறது STS தொலைக்காட்சியில் எம்மவர்கள் கலைக்கும் கலைஞர்களுக்கும் முன்னுரிமை கெடுத்துவரும் தேவராசா பாராட்டுக்குரிய விடயமாகும் நெறியாளரின் முல்லை மோகனின் நேர்காணலும் வில்லுப்பாட்டு ராஜனின் அழகான கருத்துக்களும் பழமையின் நினைவுகளும் பாராட்டுக்குரியது பழமையான கலைகளும் கலைஞர்களும் மதிக்கப்பட வேண்டும்!

அரங்கமும் அதிர்வு இயக்கு ,கவிஞர் சின்னராசா கணோஷ் பிரான்ஸ்