அரங்கமும் அதிர்வும் கணேஷ்அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துகிறேன் மயிலையூர் இந்திரன்



அரங்கமும் அதிர்வும்
என்ற பெயரோடு
நாட்டுநடப்பை,உலகநடப்பை சமுதாயக்கருத்தை
பண்பாட்டுபழக்கத்தை
எமதுவரலாற்றுப்பதிவுகளை புலத்தில் வந்துபடும் நன்னைதீமைகளை எதிர்காலவாழ்வை எம்சந்ததிக்கான விழிப்பை
இயல்இசைநாடகத்தை
மறைந்தும்மறையாத கலைஞர்களை வாழும்கலைஞர்களை சமுதாயச்சிந்தனையும் அக்கறையும் கொண்ட பேச்சாளர்களை முன்னிறுத்தி நடுவராக நின்று வழிநடாத்தும் எங்கள் இதயம்
தில் நிறைந்த சமூகநலத்தொண்டன் கணேஷ்அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் கிடைத்த ஊடகத்தின் வழியாக அரங்கமும்அதிர்வும் நூறாவதைத்தொடுவது உங்கள்உழைப்பின் உச்சம் சோர்ந்துபோகாத சமுதாயச்சிப்பிகளே வாழ்த்துக்கள் நெஞ்சம் நெகிழ்ந்து உங்களை வாழ்த்திவணங்குகின்றேன்
STS ஊடகமே தொழில்நுட்பக்கலைஞர்களே வாழ்த்துக்கள் பேச்சாளப்பெருமக்களே நீங்கள் எங்கள் சமூகத்தின் ஒளிவிளக்குகள் உங்கள் கருத்துக்கள் நாளைய வாழ்வுக்கும் சமுதாய நலனுக்கும் நல்லபாதை காட்டும் அரங்கமும்அதிர்வும் குழுவுக்கு என்வாழ்த்துக்கள் வாழ்க எங்கள் கலைச்சொத்துக்களே

STS தமிழ் தொலைக்காட்சி ஊடகமே வாழிய நீ வாழிய ! மூத்த கலைஞர் தயாநிதி,

STS தமிழ்
வான் பரப்பில்
அழகிய வரவு.
அசுர சாதனை.

ஓயாத
உன் பணியாலே
சளைக்காது
உயர்ந்து நிற்கும்
உன்னை வாழ்த்தாமல்
போவேனோ..

பல் துறை
கலைஞர்களை
என்றுமே அரவணைத்து
இனம் காட்டி
மகிழ்கின்றாய்.
வாழிய நீ வாழி..

இலை மறை
காய்களையும்
வெளிச்சத்தில்
கூட்டி வந்து உன்
ஊடக தர்மத்தால்
உலகறிய வைக்கின்றாய்
வாழிய நீ வாழி..

அதிர்வும்
அரங்கமும் என
அறிஞ்ஞர்கள் பலரோடு
அற்புதங்கள்
செய்கின்றாய்.
பாஷையூர் கணேஸ்
அவர்களுக்கும் இன்னேர்
பாராட்டுகள்..

கவிதைகள்
அரசியல் மருத்துவம்
உலக நடப்பு
செய்திகளென
செய்மதியூடு அழகாய்
பயணிக்கும் உன்னை
வாழ்த்தாமல் போவேனோ.
வாழிய நீ வாழி..

ஊடக ஜம்பவான்
இன்குரலோன் என் நண்பன்
மோகனுடன்
இசையமைப்பாளன் என் தம்பி தேவாவின்
அயராத இனிய முயற்சியை
வாழ்த்தாமல் போவேனோ
வாழிய நீ வாழி STS தமிழ்
ஊடகமே
வாழிய நீ வாழி.
பிரியங்களுடன்
தயாநிதி..

கவிஞர் எழுத்தாளர் இரா . சம்பந்தன் அவர்களின் செல்வி வர்ணி அவர்களின் கவிதைபற்றிய சிறப்புக்கருத்து !

தாயகத்திலிருந்து கவிஞர்கள் தரும்
கவிதா நிகழ்வில் கலந்து கொண்ட
செல்வி வர்ணி சச்சிதானந்தம்

அவர்கள் மிகச்சிறப்பாக
உணர்வுபூர்வமாக கவிதைகளை
யாத்தளித்திருந்தார். நாடி நரம்புகளில் சுத்தக் குருதி
ஏறிநடந்து உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பது போல்
அவருடைய கவிதைகள் சமூகத்திற்கு நன்மை பயக்கும்.
அவருக்கு எமது நெஞ்சார்ந்த
வாழ்த்துகள்

இன்நிகழ்வின் தொகுபாளர் இசையமைப்பாளர், STS தமிழ் தொலைக்காட்சி இயக்குனர், கவிஞர் எஸ்.தேவராசா அவர்களின் தொகுப்புக்கும் இன் நிகழ்வின் சிறப்புக்கும்
வாழ்த்துக்கள்

கவிஞர் எழுத்தாளர் இரா . சம்பந்தன் யேர்மனி
அன்புடன் இரா. சம்பந்தன்

கவிஞர் எழுத்தாளர் இரா . சம்பந்தன் அவர்களின் பெண்ணேநீ பேசவா பற்றிய விமர்சனம்.

திருமதி மதிவதனி பத்மநாதன்
அவர்கள் ஒளிவுமறைவின்றி
மனந்திறந்து உரையாடியுள்ளார்! முயன்று முயன்று வாழ்வில் முன்னேறி
தனக்கான சுவடுகளை இந்தப்
பூமியில் பதித்துள்ளார் . மிக சிறப்பு ,

தொகுபாளர் தமிழரசியின் ஆற்றல் மிக்க தொகுப்புக்கும் எனது
வாழ்த்துக்கள் அன்புடன்

கவிஞர் எழுத்தாளர் இரா . சம்பந்தன் யேர்மனி

STS தமிழ் தொலைக்காட்சியே உன்னை வாழ்த்தி ஓர்கவிதை!

STS தமிழ் என்ற பெயரோடு
ஊடகமாய் விளங்கும்
உன்னை மனதார வாழ்த்துகின்றேன்!

ஆற்றலும் திறமையும்
அனைவரையும்
இணைக்கும் பண்பும்
அன்பும் நிறைந்தவர்களால்
ஓயாது கடமையாற்றும்
உன்பணிக்கு என் வாழ்த்துக்கள்!

உலகெங்கும் நடப்பவையாவும்
உடன் அறிந்தும் காணவைப்பாய்
கலைஞர்களின் திறன் அறிந்து
அவர்களை உலகறியச்செய்தாய்
உன்பணிக்கு என் வாழ்த்துக்கள்!

அரசியல்,சினிமா பொழுதுபோக்கு
சமூகசிந்தனை மருத்துவம்
என்றே உன்பணி அழப்பெரியது!

கதைகள்,கட்டுரைகள்,பாடல்கள்
தேடல்கள்,நாடகங்கள்,
நம்மவர் திரைப்படங்கள்
தனித்துவம் காட்டும் உன் சேவைகள்!

கலைஞர்கள் சங்கமம்
பெண்ணேநீ பேசவா
பட்டிமன்றங்கள்
பயன் உள்ள உன் நிகழ்வுகளுடன்
நேரலைகள் என்று அளப்பெரும் சேவையாற்றும்
உன்பணியை எப்படிச்சொல்வது!

தெளிவான தொழில் நுட்ப்பத்தில்
தரமான காட்சியோடு
அழகோடு வலம்வரும் ஊடகமே
உன்பணிக்கு தலைசாய்க்கின்றேன்
உன்பணிக்கு என் வாழ்த்துக்கள்!

கலைஞர்களின் திறமைக்கு
சான்றிதழும்,கெளரவங்களும்
கொடுத்து ஊக்கமளிக்கும்
உன்பண்பு போற்றுதற்க்குரியது!

அனுபவம் வாழ்ந்தவர்களின்
கரங்களினால் உன்சேவை
பல்லாண்டு தொடர்கின்றது
என்னையும் உன்பக்கத்தில்
இணைத்து புகழும் பெயரும்
பெருமையும் தேடித்தந்தாய்
உண்மை வெல்லும்
உண்மையான உழைப்பு உறுதியாகும்
உன்சேவை தொடரட்டும்
ஊடகமே உன்னை உலகம் போற்றட்டும் !

கவிஞர் மயிலை யூர் இந்திரன் (பல்துறைக்கலைஞர் பிரான்ஸ்)

வல்லிபுரம் ஆனந்தன் அவர்களின் பெண்ணேநீ பேசவா பற்றிய விமர்சனம்.

ஒரு சிறந்த ஆளுமை இன்னோர்
சிறப்பாளரை திருமதி ஜோதி பவன்
அவர்களை கனடாவில் இருந்து தெரிந்தெடுத்து
புடம் போட்ட தங்கம் போல ஒளிரும் வண்ணம் நேர்கண்ட
திறமை, பொறியியலாளராய்
சிறப்புற்ற பெருமையின்றி
தமிழாலே விடை தந்து சிறப்புடன்
பெண்ணோடு பெண் பேசும்
பெண்ணே நீ பேசவா
பிரமிக்கும் நிகழ்வு
தொடரட்டும் தொடரலையாய்
வாழ்த்துகள் வளரட்டும்👏🙏🌷👏

வல்லிபுரம் ஆனந்தன் லண்டனில் இருந்து.

பெண்ணே நீ பேசவாவுக்கான கருத்துடன் திருமதி நிகேதா தீபன் அமெரிக்கா

வணக்கம் நான் அமெரிக்காவில் இருந்து நிகேதா. STS தமிழ் தொலைக்காட்சியில் பெண்ணே நீ பேசவா என்ற நிகழ்ச்சி பார்த்தேன் மிகச் சிறப்பாக இருந்தது. மறைந்திருக்கும் பெண்களின் திறமைகளை இனம்கண்டு அதை வெளியில் கொண்டுவரும் உங்கள் முயற்சி உண்மையில் பாராட்டப்பட வேண்டியது. வாழ்த்துகள் .தொடர்ந்தும் இப்படியான நிகழ்ச்சிகளை தொடருங்கள்.

திருமதி நிகேதா தீபன் அமெரிக்கா

குணாளினி தயானந்தன் அவர்களின் அரசியல் ஆய்வுக் களத்துக்கான கருத்துரை !

திரு முல்லைமோகன் அவர்களும் திரு தேவராசா அவர்களும்
பங்கேற்றிருந்த அரசியல் ஆய்வுக் களம் ஒன்றினை கடந்த
07/05/2022 அன்று பார்க்கக் கிடைத்தது.
அதில் அலசப்பட்ட விடயங்கள் மனம் சிலிர்க்க வைத்தது.
கிட்டத்தட்ட இலங்கையின் முழுமையாக அரசியல் பரப்பில்
பயணித்து, எதிர்காலத்தை மிகச் சரியாகக் கணித்துச் சொல்வது
போல ஒரு விறுவிறுப்பான நேர்காணலாக அது அமைந்திருந்தது.
அவற்றில் திரு முல்லைமோகன் அவர்களின் பரந்த உலக
வரலாற்று அவதானிப்புக்களுடனான சில எதிர்வு கூறல்கள் நமது
நாட்டில் மறுநா‌ளே நடக்கத் தொடங்கியிருந்தன.
நேர்காணலின் ஆழமும் அகலமும் நீட்சியும் விரிவும் வியக்க
வைத்தன. கேள்விகளுக்கு ஏற்ற பதில்கள். பதில்களுக்கு ஏற்ற
தொடர் கேள்விகள்.மிகவும் அருமையாக, அற்புதமாக ,
உயிர்த்துடிப்போடு அமைந்திருந்தது. சமூகத்தில் பல தளங்களில்
இந்நிகழ்ச்சி விளக்கேற்றி வைக்கும் என நம்புகிறேன். இருவருக்கும்
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

குணாளினி தயானந்தன் லண்டன்

கலைஞர்கள் சங்கமத்துடன் பல்துறைக்கலைஞர் தேனுகா சிவநேசராசா

நேர்காணல் ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா

சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்புதொழில் நுட்பம் தேவதி தேவராசா

படத்தொகுப்புதொழில் நுட்பம் தேனுகா தேவராசா

நிகழ்ச்சி தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

அரசியல் ஆய்வுக்களம்-மதுசூதன் குமாரசாமி(நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்)

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று திரு.மதுசூதன் குமாரசாமி
(அரசியல் விமர்சகர் மற்றும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்) கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றிய தனது கருத்துகளை கூறினார்

நேர்காணல் ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா

சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்புதொழில் நுட்பம் தேவதி தேவராசா

படத்தொகுப்புதொழில் நுட்பம் தேனுகா தேவராசா

நிகழ்ச்சி தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி