ஒரு கவியரங்கமோ அல்லது பட்டிமன்றமோ நடைபெறும் வேளையில்
மக்களின் கரவொலியோடு அவர்களின் பேராதரவைப் பெறுவதற்கு ,
அதில் கலந்து கொள்பவர்களோடு தலைமைகளாய் வீற்றிருப்பவர்களும்
முக்கிய வகிபாகத்தை யளிக்கின்றனர் . தலைமைகளின் ஆற்றலும்
ஆளுமையும் நிகழ்ச்சிக்கு உந்துசக்தியாக அமைகின்றது !
STS தமிழ் தொலைக்காட்சியில் வாராவாரம் நடைபெற்றுவரும்
பெண்ணே நீ பேசவா நிகழ்ச்சியில் ஒவ்வொரு துறையிலும் ஆளுமையுள்ள
பல பெண்கள் மிகச்சிறப்பாக உரையாடியிருந்தார்கள் . அந்நிகழ்ச்சியில்
தொகுப்பாளராய் வீற்றிருக்கும் திருமதி . தமிழரசி ஜெயதாசன்
ஆளுமையின் சிகரமாகத் திகழ்கின்றார் ! புன்முறுவல் பூத்த முகத்தோடு
அந்நிகழ்வில் பங்குபற்றும் பெண்களோடு அன்பாக அளவளாவி மிகவும்
பண்பாகவும் , நாகரிகமாகவும் உரையாடி ; அந்தப் பெண்களுக்குள்
மறைந்து கிடந்த திறன்களையும் ஆற்றல்களையும் வெளிக்கொணர்வதில்
வெற்றிகண்டுள்ளார். அந்நிகழ்வு தொய்வுநிலை காணாமல் தொடர்வதற்கு
அவரின் பங்களிப்பு அவசியமாகின்றது ! அவரின்பணி தொடரட்டும் !
அவருக்கு எமது பாராட்டுக்களும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும் .
-21 - 07 - 2022 அன்புடன் இரா . சம்பந்தன்