எம்தேசக் கவிஞர்களுக்கு STS தொலைக்காட்சி ஊடாகச் சந்தர்ப்பம் அளிப்பது மகிழ்வைத்தருகின்றது
. இரா . சம்பந்தன்

   

திருமதி கீதா ரவி அவர்கள்
புதுக்கவிதைகளில் ஆழுமைமிக்க கவிஞராகத் திகழ்கின்றார் !
அவரின் ஒவ்வொரு கவிதைகளும் மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளாய்
வாழ்வியலைச் சுட்டி நிற்கின்றன ! சொற்கள் சுதந்திரமாகச் சிறகுகள்
விரிக்கின்றன . மிகமிக இயற்கையை நேசிப்பவராகவும் , கவிதை வரிகளில்
தேவையில்லாத அடுக்குவசனங்களை எழுதாமல் அர்த்தமுள்ள கருத்துகளை
உள்ளடக்கி தனது மனவுணர்வுகளையும் சேர்த்து சிறப்பான கவிதைகளை
யாத்தளித் திருக்கின்றார் . அவருக்கு எமது பாராட்டுகள் .

        கவிஞர்கள்தரும் கவிதா நிகழ்வினூடாய் இலைமறை காயாய் காணப்படும்

எம்தேசக் கவிஞர்களுக்கு s t s தொலைக்காட்சி ஊடாகச் சந்தர்ப்பம் அளிக்கும்
இசையமைப்பாளரும் , கவிஞரும் , அத்தொலைக்காட்சியின் நிறுவனருமான
திரு . ௭ஸ் . தேவராசா அவர்கட்கும் அவரோடு கைகோர்த்துப் பயணிக்கும்
சிறந்த அறிவிப்பாளரும் , ஒருங்கிணைப்பாளருமான திரு. முல்லை மோகன் அவர்கட்கும் எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும் .

                                              அன்புடன் . இரா . சம்பந்தன்

மாவீரர்பாடல் (தங்கத்தமிழ் மண்ணை) !பாடியவர் V,S ஜெயன் ,இசை ஈழத்து இசைத்தென்றல் :

பாடியவர் V,S.ஜெயன் குரல் ஒலிப்பதிவு ; ஒளிப்பதிவு JJ ஒலிப்பதிவுக்கூடம் பாடலாக்கம் இசைக்கருவி மீட்டல் பாடல் கலவை, படத்தொகும் , இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

தமிழீழக்கருவறைள் மீண்டும் உங்களை சுமக்கும் (பாடியவர் மயிலையூர் இந்திரன்)

தமிழீழக்கருவறைகள் மீண்டும் உங்களை சுமக்கும் (பாடியவர் மயிலையூர் இந்திரன்) பாடலாக்கம் தமிழரசி.ஜெயதாதன் (லண்டன் குரல் ஒலிப்பதிவ பிரஜீன் ஒலிப்பதிவு பாடல்கலவை படக்கலவை இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

விழிப்புலன்அற்றவள் வீரகாவிய மாமாக்களை அழைக்கும் பாடல் பாடியவர் செல்வி கலைவாணி.ரவீந்திரசிவம் யேர்மனி

இந்தப்பாடல் மாவீரர்களுக்காண அற்பணம்! எம் இனம்காக்கா எழுந்த தலைவன்- பின் அணியாய் அணியாய் திரண்டு படை எமக்காய் எம் இனத்துக்காய் தன் உயிர் நீர்த்த அந்த தியாகிகளை நினைத்:தபாடல் பாடியவர் செல்வி கலைவாணி.ரவீந்திரசிவம் யேர்மனி பாடலாக்கம் ஒலிப்பதிவு பாடல்கலவை ஒலிப்பதிவு படக்கலவை இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

எங்கள் மாவீரர்களே எழுந்து வாருங்கள் ! பாடியவர் மயிலையூர் இந்திரன் ,இசை எஸ் .தேவராசா

இந்தப்பாடல் மாவீரர்களுக்காண அற்பணம்! எம் இனம்காக்கா எழுந்த தலைவன்- பின் அணியாய் அணியாய் திரண்டு படை எமக்காய் எம் இனத்துக்காய் தன் உயிர் நீர்த்த அந்த தியாகிகளை நினைத்:தபாடல் பாடியவர் மயிலையூர் இந்திரன் குரல் ஒலிப்பதிவு ஒளிப்பதிவு பிரஜீன் பாடலாக்கம் ஒலிப்பதிவு பாடல்கலவை படக்கலவை இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் 12.11.2022

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் இணைந்து கொண்டு தற்கால அரசியல் நிலைகள், மாவீரர் காலம் என்பதால் அரசின் நிலைப்பாடு இரணுவ இயந்திரங்களை முடுக்கிவிட்டு மாவீரர் நிகழ்வுகளில் மக்களை முடக்க எண்ணி அவர்களை மீண்டும் பயமுறுத்தலுக்கு உள்ளாக்க முயலும் நிலைகள் என பல்வேறு விடையங்கள் பேசு பொருளாக உள்ளது, முளுமையாக அறிந்து கொள்ள நீகழ்வுடன் இணைந்து பாருங்கள் நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் எஸ்தேவராசா இது ஒரு STS தமிழ் தொலைக்காட்சி தயாரிப்பு நீங்களும் இணைந்து கொள்ள: மின்னஞ்சல் stsstudio@hotmail.de முகநுால் https://www.facebook.com/ STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369 முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849 கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22 தொடர்புகளுக்கு தொகுப்பாளர் தமிழரசி 0044 7388 008063

கவிதை: எஸ் ரி எஸ் வாழிகவிஞர் உடுவிலூர் கலா !


எஸ் ரி எஸ் வாழி !

எஸ்.ரி.எஸ் என்னும்
தொலைக் காட்சியே

எங்கும் உந்தன்
எழிலான பயணம்

தாயகத்து உறவுகளைத்
தாங்கியே நீயும்

ஓயாது தொடர்கிறாய்
ஒய்யார சேவையாய்

கவிஞர்கள் தரும் கவிதை நிகழ்விலே

கவிஞராய் நானும்
களமே கினேனே

புலம்பெயர் தேசங்களில்
புன்னகைக்கும் எம்முறவுகள்

புலமையொடு எம்மையும்
கண்டு மகிழ்ந்திட

களமது தந்த
கற்பகச் சோலையே

உந்தன் அரங்கினில்
எந்தன் கவிதைகள்

உலவியே அசைந்தது
உவகையுற்றேன் நானுமே

முத்தான உன்பணியும்
மூன்றுபாகங்களில்

தித்திப்பாய்த் தொடர்ந்தது
தீஞ்சுவைத் தமிழோடு

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

நன்றியே உந்தனுக்கு
நாவாலே என்றும்

வாழி நீயே
வாழி வாழி

வண்ணத் தமிழோடு
வனப்புடன் வாழி