எம்தேசக் கவிஞர்களுக்கு STS தொலைக்காட்சி ஊடாகச் சந்தர்ப்பம் அளிப்பது மகிழ்வைத்தருகின்றது
. இரா . சம்பந்தன்

   

திருமதி கீதா ரவி அவர்கள்
புதுக்கவிதைகளில் ஆழுமைமிக்க கவிஞராகத் திகழ்கின்றார் !
அவரின் ஒவ்வொரு கவிதைகளும் மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளாய்
வாழ்வியலைச் சுட்டி நிற்கின்றன ! சொற்கள் சுதந்திரமாகச் சிறகுகள்
விரிக்கின்றன . மிகமிக இயற்கையை நேசிப்பவராகவும் , கவிதை வரிகளில்
தேவையில்லாத அடுக்குவசனங்களை எழுதாமல் அர்த்தமுள்ள கருத்துகளை
உள்ளடக்கி தனது மனவுணர்வுகளையும் சேர்த்து சிறப்பான கவிதைகளை
யாத்தளித் திருக்கின்றார் . அவருக்கு எமது பாராட்டுகள் .

        கவிஞர்கள்தரும் கவிதா நிகழ்வினூடாய் இலைமறை காயாய் காணப்படும்

எம்தேசக் கவிஞர்களுக்கு s t s தொலைக்காட்சி ஊடாகச் சந்தர்ப்பம் அளிக்கும்
இசையமைப்பாளரும் , கவிஞரும் , அத்தொலைக்காட்சியின் நிறுவனருமான
திரு . ௭ஸ் . தேவராசா அவர்கட்கும் அவரோடு கைகோர்த்துப் பயணிக்கும்
சிறந்த அறிவிப்பாளரும் , ஒருங்கிணைப்பாளருமான திரு. முல்லை மோகன் அவர்கட்கும் எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும் .

                                              அன்புடன் . இரா . சம்பந்தன்