பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம்!

தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் எமது நிலமே எமது உரிமை , கொக்கிளாய் எமது பூர்வீகம் , கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் காணி பறிக்கவா இந்த திட்டம் , நிலமிழந்து போனால் பலமிழந்து போவோம் ,வளங்களை சுரண்டிவிட்டு எங்கள் நிலங்களை பறிக்கவா இந்த நாடகம் போன்ற கோசங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் முன்னாள் வடக்கு மாகாணசபை …

ஸ்ருட்காட்நகரில் நடைபெற்று கொண்டுள்ள மக்கள் சந்திப்பு

ஸ்ருட்காட்நகரில் நடைபெற்றுக்கொண்டுள்ள மக்கள் சந்திப்பில் மக்களின் ஆதங்கங்களை உலகத்தமிழினத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டி , தமிழ்த் தேசியத்திற்கு பக்கபலமாக நிற்கின்ற மக்கள் இணைந்து தமிழ் பாடத்திட்டத்தில் திரிவு படுத்தப்பட்டுள்ள அனைத்து தவறான தகவல்களையும் நீக்க கோரி இடம் பெறும் மக்கள் சந்திப்பு ! நேரலையில் :

யேர்மன் ஸ்ருட்காட் நகரில் தமிழ்ப்பாட நூல்களைத் திரும்பப் பெறக்கூறி த. க முன்பாக கவனயீர்ப்பு

யேர்மன் ஸ்ருட்காட் நகரில் புலம்பெயர் இளையோரின் தமிழ்த்தேசியச் சிந்தனையைச் சிதைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள தமிழ்ப்பாட நூல்களைத் திரும்பப் பெறக்கூறி 17.102021 இன்றைய தினம் தமிழ்க் கல்விக்கழகம் முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடந்தேறியுள்ளது இதன்மூலம் பாடநூல் விவகாரம் அடுத்தகட்டத்திற்குள் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.