தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் எமது நிலமே எமது உரிமை , கொக்கிளாய் எமது பூர்வீகம் , கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் காணி பறிக்கவா இந்த திட்டம் , நிலமிழந்து போனால் பலமிழந்து போவோம் ,வளங்களை சுரண்டிவிட்டு எங்கள் நிலங்களை பறிக்கவா இந்த நாடகம் போன்ற கோசங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் , கொக்கிளாய் பங்குத்தந்தையர்கள் , பொத்துவில் தொடக்கி பொலிகண்டி பேரெழுச்சி இயக்கத்தை சேர்ந்த வேலன் சுவாமி பொதுமக்கள் ஆர்வலர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.