அரசியல் ஆய்வுக்களம் சிறப்பாக இருந்தது என
அரங்கமும் அதிர்வும் சின்னராசா கணேஷ் கருத்துப்பதிவு !

அரசியல் ஆய்வுக்களம் சிறப்பாக இருந்தது இன்றைய காலகட்டத்து அரசியலையும் அரசியல் தந்திரங்களையும் சுட்டிக்காட்டி தோலுரிப்பதைப்போல் உங்கள் நெறியாளர் தேவராசா அவர்களின் கேள்விகளும் ஊடகவியலாளர் முல்லைமோகனின் அவர்களின் பதில்களும் அமைந்திருந்தது,

ராஜபக்சாக்களை காப்பாற்ற வந்தவர் ரணில் மட்டுமா நமது தலைமைகளும் ஜனாதிபதி வாக்கெடுப்பின்போது வெட்டவெளிச்சமாக தெரியவந்தது,
இன்றுய அரசியல் சூட்சுமத்தை யாராலுமே கணக்கிடுவது மிகவும் கடினமாம் ? ஒரு ரணிலால் இன்று நாட்டையே காப்பாற்ற முடியுமானால் ஏனிந்த ராஜபக்சாக்களால் காப்பாற்ற முடியாதது போனது ஏனென்ற ஒரு கேள்வி இதுவரை நடத்தப்பட்ட குழப்பங்களுக்கு யார்காரணம் ? இன்று குழப்பநிலை மாறுவதர்க்கு காரணங்கள்யார் ? பொருளாதார வீழ்ச்சிக்கு போராட்டம் அங்கு பொருட்கள் சேதமாக்கப்பட்டனவே மேலும் பொருளாதார வீழ்ச்சிகள் அரசசொத்துக்களும் இப்போது நாசம் குடிமக்களின் தலையில் மேலும் பலசுமைகள் , சரி நமது அரசியல் தலைமைகள் எப்போது ஓய்வெடுக்க போறார்கள் ? அவர்கள் சரியாக செயல்படுகிறார்களா? நமது மக்களுக்காக நமது அரசியல் தலைமைகள் எப்போது ஒன்று சேரப்போசுவார்கள் ஆளுக்கொரு கட்சி ஆளுக்கொரு கொள்கையே அப்போ மக்கள் நடுத்தெருவிலா ? பொதுமக்கள் சிலர் அரசுடன் சேர்ந்து மக்களை காப்பாற்றியே வருகிறார்களோ இல்லையோ தம்மைதாமே பாதுக்கிறார்கள் இன்னும் சிலரோ அரசுடன் சேர்ந்து மக்களுக்காக சேவைசெய்கிறாரே தங்களது பணிகளை சிலர் சரிவர செய்கிறார்கள் அவைகளையும் சிலபிரிவினைகளை சொல்லியே கெடுக்காதீர்கள் அரசியல் ஆய்வுக்களத்தில் நீங்கள் சொல்வது உண்மை. நிஜமன எம்பி நேற்று பிரதமர் இன்று ஜனாதிபதி இதுபோல் நாளை நம்மவர்களிலும் சிலமாற்றங்கள் வரும் ஜாரறிவார் ஒப்பனை போடும் நடிகர்கள் மத்தியில் ஒப்பனை போடாத அரசியல் நடிகர்களின் நடிப்புகளும் பேச்சுக்களும் பெரும் கவர்ச்சியை கொடுக்கிறது என்பது தான் உண்மை!

அரங்கமும் அதிர்வும்

சின்னராசா கணேஷ்

ஆளுமையின் சிகரம் ! திருமதி தமிழரசி ஜெயதாசன்


ஒரு கவியரங்கமோ அல்லது பட்டிமன்றமோ நடைபெறும் வேளையில்
மக்களின் கரவொலியோடு அவர்களின் பேராதரவைப் பெறுவதற்கு ,
அதில் கலந்து கொள்பவர்களோடு தலைமைகளாய் வீற்றிருப்பவர்களும்
முக்கிய வகிபாகத்தை யளிக்கின்றனர் . தலைமைகளின் ஆற்றலும்
ஆளுமையும் நிகழ்ச்சிக்கு உந்துசக்தியாக அமைகின்றது !

      STS தமிழ் தொலைக்காட்சியில் வாராவாரம் நடைபெற்றுவரும்

பெண்ணே நீ பேசவா நிகழ்ச்சியில் ஒவ்வொரு துறையிலும் ஆளுமையுள்ள
பல பெண்கள் மிகச்சிறப்பாக உரையாடியிருந்தார்கள் . அந்நிகழ்ச்சியில்
தொகுப்பாளராய் வீற்றிருக்கும் திருமதி . தமிழரசி ஜெயதாசன்
ஆளுமையின் சிகரமாகத் திகழ்கின்றார் ! புன்முறுவல் பூத்த முகத்தோடு
அந்நிகழ்வில் பங்குபற்றும் பெண்களோடு அன்பாக அளவளாவி மிகவும்
பண்பாகவும் , நாகரிகமாகவும் உரையாடி ; அந்தப் பெண்களுக்குள்
மறைந்து கிடந்த திறன்களையும் ஆற்றல்களையும் வெளிக்கொணர்வதில்
வெற்றிகண்டுள்ளார். அந்நிகழ்வு தொய்வுநிலை காணாமல் தொடர்வதற்கு
அவரின் பங்களிப்பு அவசியமாகின்றது ! அவரின்பணி தொடரட்டும் !
அவருக்கு எமது பாராட்டுக்களும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும் .

              -21 - 07 - 2022 அன்புடன் இரா . சம்பந்தன்

அரங்கமும் அதிர்வும் கணேஷ்அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துகிறேன் மயிலையூர் இந்திரன்



அரங்கமும் அதிர்வும்
என்ற பெயரோடு
நாட்டுநடப்பை,உலகநடப்பை சமுதாயக்கருத்தை
பண்பாட்டுபழக்கத்தை
எமதுவரலாற்றுப்பதிவுகளை புலத்தில் வந்துபடும் நன்னைதீமைகளை எதிர்காலவாழ்வை எம்சந்ததிக்கான விழிப்பை
இயல்இசைநாடகத்தை
மறைந்தும்மறையாத கலைஞர்களை வாழும்கலைஞர்களை சமுதாயச்சிந்தனையும் அக்கறையும் கொண்ட பேச்சாளர்களை முன்னிறுத்தி நடுவராக நின்று வழிநடாத்தும் எங்கள் இதயம்
தில் நிறைந்த சமூகநலத்தொண்டன் கணேஷ்அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் கிடைத்த ஊடகத்தின் வழியாக அரங்கமும்அதிர்வும் நூறாவதைத்தொடுவது உங்கள்உழைப்பின் உச்சம் சோர்ந்துபோகாத சமுதாயச்சிப்பிகளே வாழ்த்துக்கள் நெஞ்சம் நெகிழ்ந்து உங்களை வாழ்த்திவணங்குகின்றேன்
STS ஊடகமே தொழில்நுட்பக்கலைஞர்களே வாழ்த்துக்கள் பேச்சாளப்பெருமக்களே நீங்கள் எங்கள் சமூகத்தின் ஒளிவிளக்குகள் உங்கள் கருத்துக்கள் நாளைய வாழ்வுக்கும் சமுதாய நலனுக்கும் நல்லபாதை காட்டும் அரங்கமும்அதிர்வும் குழுவுக்கு என்வாழ்த்துக்கள் வாழ்க எங்கள் கலைச்சொத்துக்களே

STS தமிழ் தொலைக்காட்சி ஊடகமே வாழிய நீ வாழிய ! மூத்த கலைஞர் தயாநிதி,

STS தமிழ்
வான் பரப்பில்
அழகிய வரவு.
அசுர சாதனை.

ஓயாத
உன் பணியாலே
சளைக்காது
உயர்ந்து நிற்கும்
உன்னை வாழ்த்தாமல்
போவேனோ..

பல் துறை
கலைஞர்களை
என்றுமே அரவணைத்து
இனம் காட்டி
மகிழ்கின்றாய்.
வாழிய நீ வாழி..

இலை மறை
காய்களையும்
வெளிச்சத்தில்
கூட்டி வந்து உன்
ஊடக தர்மத்தால்
உலகறிய வைக்கின்றாய்
வாழிய நீ வாழி..

அதிர்வும்
அரங்கமும் என
அறிஞ்ஞர்கள் பலரோடு
அற்புதங்கள்
செய்கின்றாய்.
பாஷையூர் கணேஸ்
அவர்களுக்கும் இன்னேர்
பாராட்டுகள்..

கவிதைகள்
அரசியல் மருத்துவம்
உலக நடப்பு
செய்திகளென
செய்மதியூடு அழகாய்
பயணிக்கும் உன்னை
வாழ்த்தாமல் போவேனோ.
வாழிய நீ வாழி..

ஊடக ஜம்பவான்
இன்குரலோன் என் நண்பன்
மோகனுடன்
இசையமைப்பாளன் என் தம்பி தேவாவின்
அயராத இனிய முயற்சியை
வாழ்த்தாமல் போவேனோ
வாழிய நீ வாழி STS தமிழ்
ஊடகமே
வாழிய நீ வாழி.
பிரியங்களுடன்
தயாநிதி..

கவிஞர் எழுத்தாளர் இரா . சம்பந்தன் அவர்களின் செல்வி வர்ணி அவர்களின் கவிதைபற்றிய சிறப்புக்கருத்து !

தாயகத்திலிருந்து கவிஞர்கள் தரும்
கவிதா நிகழ்வில் கலந்து கொண்ட
செல்வி வர்ணி சச்சிதானந்தம்

அவர்கள் மிகச்சிறப்பாக
உணர்வுபூர்வமாக கவிதைகளை
யாத்தளித்திருந்தார். நாடி நரம்புகளில் சுத்தக் குருதி
ஏறிநடந்து உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பது போல்
அவருடைய கவிதைகள் சமூகத்திற்கு நன்மை பயக்கும்.
அவருக்கு எமது நெஞ்சார்ந்த
வாழ்த்துகள்

இன்நிகழ்வின் தொகுபாளர் இசையமைப்பாளர், STS தமிழ் தொலைக்காட்சி இயக்குனர், கவிஞர் எஸ்.தேவராசா அவர்களின் தொகுப்புக்கும் இன் நிகழ்வின் சிறப்புக்கும்
வாழ்த்துக்கள்

கவிஞர் எழுத்தாளர் இரா . சம்பந்தன் யேர்மனி
அன்புடன் இரா. சம்பந்தன்

கவிஞர் எழுத்தாளர் இரா . சம்பந்தன் அவர்களின் பெண்ணேநீ பேசவா பற்றிய விமர்சனம்.

திருமதி மதிவதனி பத்மநாதன்
அவர்கள் ஒளிவுமறைவின்றி
மனந்திறந்து உரையாடியுள்ளார்! முயன்று முயன்று வாழ்வில் முன்னேறி
தனக்கான சுவடுகளை இந்தப்
பூமியில் பதித்துள்ளார் . மிக சிறப்பு ,

தொகுபாளர் தமிழரசியின் ஆற்றல் மிக்க தொகுப்புக்கும் எனது
வாழ்த்துக்கள் அன்புடன்

கவிஞர் எழுத்தாளர் இரா . சம்பந்தன் யேர்மனி