STS தமிழ் தொலைக்காட்சி ஊடகமே வாழிய நீ வாழிய ! மூத்த கலைஞர் தயாநிதி,

STS தமிழ்
வான் பரப்பில்
அழகிய வரவு.
அசுர சாதனை.

ஓயாத
உன் பணியாலே
சளைக்காது
உயர்ந்து நிற்கும்
உன்னை வாழ்த்தாமல்
போவேனோ..

பல் துறை
கலைஞர்களை
என்றுமே அரவணைத்து
இனம் காட்டி
மகிழ்கின்றாய்.
வாழிய நீ வாழி..

இலை மறை
காய்களையும்
வெளிச்சத்தில்
கூட்டி வந்து உன்
ஊடக தர்மத்தால்
உலகறிய வைக்கின்றாய்
வாழிய நீ வாழி..

அதிர்வும்
அரங்கமும் என
அறிஞ்ஞர்கள் பலரோடு
அற்புதங்கள்
செய்கின்றாய்.
பாஷையூர் கணேஸ்
அவர்களுக்கும் இன்னேர்
பாராட்டுகள்..

கவிதைகள்
அரசியல் மருத்துவம்
உலக நடப்பு
செய்திகளென
செய்மதியூடு அழகாய்
பயணிக்கும் உன்னை
வாழ்த்தாமல் போவேனோ.
வாழிய நீ வாழி..

ஊடக ஜம்பவான்
இன்குரலோன் என் நண்பன்
மோகனுடன்
இசையமைப்பாளன் என் தம்பி தேவாவின்
அயராத இனிய முயற்சியை
வாழ்த்தாமல் போவேனோ
வாழிய நீ வாழி STS தமிழ்
ஊடகமே
வாழிய நீ வாழி.
பிரியங்களுடன்
தயாநிதி..

About The Author

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert