அரசியல் ஆய்வுக்களம் சிறப்பாக இருந்தது இன்றைய காலகட்டத்து அரசியலையும் அரசியல் தந்திரங்களையும் சுட்டிக்காட்டி தோலுரிப்பதைப்போல் உங்கள் நெறியாளர் தேவராசா அவர்களின் கேள்விகளும் ஊடகவியலாளர் முல்லைமோகனின் அவர்களின் பதில்களும் அமைந்திருந்தது,
ராஜபக்சாக்களை காப்பாற்ற வந்தவர் ரணில் மட்டுமா நமது தலைமைகளும் ஜனாதிபதி வாக்கெடுப்பின்போது வெட்டவெளிச்சமாக தெரியவந்தது,
இன்றுய அரசியல் சூட்சுமத்தை யாராலுமே கணக்கிடுவது மிகவும் கடினமாம் ? ஒரு ரணிலால் இன்று நாட்டையே காப்பாற்ற முடியுமானால் ஏனிந்த ராஜபக்சாக்களால் காப்பாற்ற முடியாதது போனது ஏனென்ற ஒரு கேள்வி இதுவரை நடத்தப்பட்ட குழப்பங்களுக்கு யார்காரணம் ? இன்று குழப்பநிலை மாறுவதர்க்கு காரணங்கள்யார் ? பொருளாதார வீழ்ச்சிக்கு போராட்டம் அங்கு பொருட்கள் சேதமாக்கப்பட்டனவே மேலும் பொருளாதார வீழ்ச்சிகள் அரசசொத்துக்களும் இப்போது நாசம் குடிமக்களின் தலையில் மேலும் பலசுமைகள் , சரி நமது அரசியல் தலைமைகள் எப்போது ஓய்வெடுக்க போறார்கள் ? அவர்கள் சரியாக செயல்படுகிறார்களா? நமது மக்களுக்காக நமது அரசியல் தலைமைகள் எப்போது ஒன்று சேரப்போசுவார்கள் ஆளுக்கொரு கட்சி ஆளுக்கொரு கொள்கையே அப்போ மக்கள் நடுத்தெருவிலா ? பொதுமக்கள் சிலர் அரசுடன் சேர்ந்து மக்களை காப்பாற்றியே வருகிறார்களோ இல்லையோ தம்மைதாமே பாதுக்கிறார்கள் இன்னும் சிலரோ அரசுடன் சேர்ந்து மக்களுக்காக சேவைசெய்கிறாரே தங்களது பணிகளை சிலர் சரிவர செய்கிறார்கள் அவைகளையும் சிலபிரிவினைகளை சொல்லியே கெடுக்காதீர்கள் அரசியல் ஆய்வுக்களத்தில் நீங்கள் சொல்வது உண்மை. நிஜமன எம்பி நேற்று பிரதமர் இன்று ஜனாதிபதி இதுபோல் நாளை நம்மவர்களிலும் சிலமாற்றங்கள் வரும் ஜாரறிவார் ஒப்பனை போடும் நடிகர்கள் மத்தியில் ஒப்பனை போடாத அரசியல் நடிகர்களின் நடிப்புகளும் பேச்சுக்களும் பெரும் கவர்ச்சியை கொடுக்கிறது என்பது தான் உண்மை!
அரங்கமும் அதிர்வும்
சின்னராசா கணேஷ்