மருத்துவரும் நாமும் நிகழ்வில் யேர்மனி நொயிஸ் நகரில் வாழ்ந்து வரும் மருத்துவ வேதியல் மற்றும் குருதிப் பரிமாற்றத்துக்கான மருத்துவருமான காந்தரூபன் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு முன் நிற்கும் சுரப்பி, 40 அல்லது 50 வயதுக்கு பின் ஏன் சிறு நீர் கழிக்க சிலருக்கு சிரமங்கள் ஏற்படுகின்றது என்பது பற்றியும், சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்
நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8:00 மணிக்கு நீங்கள் கண்டுகளிக்கலாம்.10 கேள்விகளுக்கு 10 பிரமுகர்களின் பதில்கள், பல நாட்டில் வாழ்பவர்களாகிய அவர்கள் கூறும் பதில்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள்
அரங்கமும் அதிர்வும் கணேஷ் அவர்களின் சிந்தனையில் உதித்த கருவுக்கு. தொப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன்
STS தமிழ்த் தொலைக்காட்சி ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்து ஆறாவது ஆண்டில் கால் பதிக்கும் இவ்வேளை எனது நல்வாழ்த்துகள்….!
நிகழ்ச்சிகள் பலவற்றை இதில் அழகுற வடிவமைக்கும் இயக்குனர் தேவா அண்ணா உங்களுக்கும் உவந்து கூறுகின்றேன் வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றிகள்….!
வீட்டுக் கடமையுடன் இதையும் சரிவரச் செய்யும் உங்கள் சேவை கண்டு எண்ணி எண்ணி வியக்கின்றேன் மகிழ்கின்றேன் மெச்சுகின்றேன்….!
புலம்பெயர் தேசங்கள் மற்றும் தாயக எம் தமிழ் உறவுகளை ஒருங்கிணைத்து உறவுப்பாலமாக இத் தொலைக்காட்சியை சிறப்பாக நடாத்தும் உங்கள் பணி மென்மேலும் சிறந்து மிளிரட்டும்….!
வார்த்தைகள் தொடுத்து நான் வாழ்த்துகள் சொல்கின்றேன் வாழும் நாள்வரையும் சேவைகள் செய்திடுக வேண்டும் உங்கள் அளப்பரிய சேவை புலம்பெயர் மண்ணில் வாழ்த்துகின்றேன் புகழ் ஓங்க விண்ணில்….!
தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர்,பெண்ணே நீ பேசவா தொகுப்பாளர் (லண்டன்)
பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகளுடன் இன் நிகழ்வுடன் புது புது கவிஞர்களை உள் வாங்கி வெற்றி நடையோடு வலம் வரும் நிகழ்வே அன்பைத் தேடும் இதயங்கள் ( பாகம்7)
தமிழுக்கும் கவிகளுக்கும் பெருமை சேர்க்க உருவான இன்நிகழ்ச்சி எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி உலகெல்லாம் பரந்து வாழும் எமது கவிஞர்களின் படைப்பை தாங்கி வருகின்றது
அன்பைத் தேடும் இதயங்கள் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள்
நாம் பயணித்துக் கொண்டிருப்பது தனித்துவத்துடன் எமது கலைக்கும் கலைஞர்களுக்கும் எமதுதாய் மண் செயல்பாடுகளுக்கும் என்பதே உறுதி !
நாம் இந்த ஆறாம் ஆண்டில் இதை நாங்கள் ஆடம்பரமாக கொண்டாட விரும்பவில்லை! இதற்கு மாறாக நாங்கள் இன்னும் எமது கலைக்காக நற்பணிகள் செய்யலாம் என்றே சிந்திக்கிறோம் !
நாம் அமைதியாக இருந்து ஆறாம் ஆண்டில் கால் பதிக்க நீங்களும் எங்களுக்கு அளித்த ஊக்கமே காரணம்!
எமக்கும், எமது தனித்துவ கலைக்கும் இடம் இல்லை என்று நினைத்தவர்களுக்கு எமது தனித்துவப்படைப்புக்கள் எம்மவர்நிகழ்வுகள் விரும்புவோர், ஊக்கமளிப்போர் இருக்கின்றார்கள் என்ற அந்த தகவலை உங்களிடம் குறிப்பிட விரும்புகிறோம் .நாங்கள் ஒளிபரப்பும் I P Box நண்பரிடம் இருந்து கிடைத்த தகவல் எம்மை ஆச்சரியப்படுத்தியது! எமது தனித்துவம் மிக்க கலைஞர்களின் படைப்பை எஸ் ரி எஸ் தமிழ் நிகழ்வில் அதிகமானோர் பார்ப்பதாக இணைப்பாளர்கள் கூறி நிற்பதும் எமக்கு ஆச்சரியத்தைத் தந்தது .அதுபோல் உங்களுக்கும் இருக்கும் என நம்புகிறோம்!
இங்கே எம்மோடு பயணிக்கும் நண்பன் அறிப்பாளர் முல்லை மோகன் எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியில் முதன்மை தொகுப்பாளர், ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர்,முதன்மை இணைப்பாளர் , பேச்சாளர், பொதுப்பணிச் செயல்பாட்டாளர் அவரின் சிறப்பான இணைப்புகளுடன் நாங்கள் இப்போது பல நிகழ்வுகளை சொந்தமாக தயாரிக்கின்றோம்
மருத்துவரும் நாமும் ! அசைவும் அபிநயமும் ! அரசியல் ஆய்வுக்களம்! கலைஞர்கள் சங்கமம் ! ஆடலாம் பாடலாம்! அரங்கவேளை! நினைவலைகள்! நலம்படவாழ்வோம்! அகமும் புறமும்! பாடுவோர் பாடவரலாம் ! கவிச் சோலை! கவிஞர்கள் தரும் கவிதைகள்! அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும்! பெண்ணே நீ பேசவா! விளையாட்டுக்களம்! என இன்னும் பல நிகழ்வுகள்
அரங்கமும் அதிர்வும் நிகழ்வை எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சிக்காய் தயாரித்து இயக்கும் கணேஸ் என இன்னும் பல புதிய நிகழ்வுகளுடன் நம் பணி தொடரும் அதற்காக ஆக்கம் ஊக்கம் அளிக்கும் அன்பு உறவுகளே! எமது கலையின் வடிவத்தை உலகுக்கு எடுத்துவரும் எம்மவர் எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு தொடர்ந்தும் உங்கள் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் தருவீர்கள் என நம்புகிறோம் .உங்கள் பலமே எங்கள் கலையின் உயர்வு,நமக்கென்று தனித்துவம் நம்மை கலைதனில் உயர்த்தி உலகறியச் செய்ய அனைவரும் இணைந்து நிற்போம் பலமாக! என்றும் கலை உயர நாம் உயர்வோம் !
யேர்மனி டோட்முண்ட் நகரில் இருந்து தலைநிமிர்வுடன், தனித்துவத்துடன் எமது கலைஞர்கள் களமாக ஈழத்தமிழர் படைப்பை சிறக்கவைக்கும் நோக்கை தனித்துவமாக கொண்டு எஸ் ரி எஸ் தமிழ் tv தனது இலட்சியப்பாதையில் பயணித்து வந்ததைக்கண்டு பல மூத்தகலைஞர்கள் நலம்விரும்பிகள் எமக்கென தனிக்களம் என்பதன் தேவை என்ற ஆதங்கத்துடன் எம்மோடு கலந்துரையாடியதும் எமது நோக்கு சரியானது என்பதை உறுதிப்படுத்தியது,
இதில் முதல் கண் எனது பாரியார் எனது நோக்கை அவரிடம் கூறியபோது நல்லது செய்வதற்கு ஏன் தயக்கம் நாங்கள் யாரிடமும் நிதிக்காக போகத் தேவையில்லை தனித்துவமாக செய்வோம் என்ற ஆக்கபூர்வமான கருத்துகளுடன்ஊக்குவித்தார்
உதவி இயக்குனர் சுதந்தினி தேவராசா
அத்தோடு சுவெற்றா கனகதுர்க்காஆலயக்குருக்கள் ஐெயந்தி நாதசர்மா அவர்களின் சிறப்பான ஆசியும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
டோட்முண்ட் சிவன் ஆலயக்குருக்கள் தெய்வேந்திரம் அவர்களின் சிறப்பான ஆசியும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
கடந்த காலத்தில் லைக்கா ரிவி இணைப்பிலும் சாலை ரீவீ மூலம் இணை த்து தந்த சந்தோரா ரீவி நிர்வாகி இயக்குனர் அருண் ஐேசுதாசன் அவர்களுக்கு எஸ் ரி எஸ் தமிழ் நிர்வாகத்தினர்களாகிய எமது நன்றிகள்
அன்று தொட்டு இன்று வரை நண்பனாகவும் STSசின் அனைத்து கலைவிடையங்களிலும் பின் தொலைக்காட்சிக்கான கருத்தாடலிலும் வடிவமைப்பிலும் வரைகலைக் கலைஞராகவும் உறுதுணையாக நிற்கும் ஸ்ரீதருக்கும் நன்றி
ஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளர்,தொழில்நுட்பவியலாளர் தமிழ் எம் ரிவி இணையத்தொலைக்காட்சி இயக்குனர் என பன்முகம் கொண்ட என் வி சிவநேசன்
அவர்களும் எம்முடன் கருத்தாடலிலும் செயல்பாட்டிலும் இணைந்து நிற்கும் அவருக்கும் நன்றி.
ஆரம்பத்தில் இருந்து கருத்தாடலிலும் செயல்பாட்டிலும் STSதமிழ்Tvயோடு முதன்மை இணைப்பாளராகவும் முதல்மை தொகுப்பாளராகவும் தோள் கொடுத்து நிற்கும் ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர், பேச்சாளர் அறிவுப்பாளர் மணிக்குரல்தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன்
அவர்களுக்கும் நன்றி
STSதமிழ்Tv சிறப்புற வேண்டும் என்ற நோக்கோடு தாயகத்தில் இருந்து முகநுால் உறவாக இணைந்து பல ஆண்டுகள் நட்புடன் நற்கருத்துகளுடன் எமது கலைக்காவும் எமது கலைஞர்கள் பதிவாகவும் தாமும் தாயகப்பதிவுடன் இணைந்துள்ள முல்லைஈஸ்வரம் இயக்குனர் நாடகப்பயிற்றுவிப்பாளர், யோகா பயிற்றுவிப்பாளர், மனோதத்துவ ஆலோசகர், பொதுப்பணியாளர் திரு குமாரு யோகேஸ்
அவர்களுக்கும் நன்றி
அன்போடு எம்முடன் இணைந்து ஆர்வத்துடன் கலந்து தானும் எமது நோக்கோடு பயணித்த அன்பு உள்ளம் இன்று எம்முடன் இல்லை, அன்பு உள்ளம்கொண்ட அறிவிப்பாளர், D Jஒலிபரப்பாளர் பொதுப்பாணியார் மனிதநேயர் அவைத்தென்றல் வல்லிபுரம் -திலகேஸ்வரனுக்கும்
நன்றி ,
STSதமிழ்Tv க்கான லோகோ முகப்பட்டைவேறுமாதிரி இருந்தால் சிறப்பென உரைத்த செல்வா வீடியோ இயக்குனர் தொழில்நுட்பவியலாளர், ஔிப்பதிவு ,DJ என பல்கலை வல்லுனர் தன்னிடம் இருக்கும் பதிவுகளையும் தருவதுமட்டுமல்ல STSTamil சிறப்பாக இருக்க வேண்டும் என்று STSTamil லோகோவையும், விதம் விதமாக வீடியோ குறும்பதிவுகளையும் தந்து இதன் சிறப்பு நன்றாக வரவேண்டும் என்ற தொழில் நுட்பக் கலந்துரையாடல் என பல உதவிகளை செய்தார் கலைஞர் செல்வா வீடியோ இயக்குனருக்கும் நன்றி
முகநுால் வழிவந்த எமது ஈழத்து உறவு இந்தியாவில் இருந்து ஊடகப்பணி, படப்பிடிப்பு தொழில் நுட்பம், வரைகலைகள், நெற் தொலைக்காட்சி தொடர்பாளர் என பல்துறைசார் கலைஞன் பிரதீபன்
STSதமிழ்Tv யின் லோகோ வடிவமைத்து தந்தமைக்காக நன்றி
STSதமிழ்Tv இணைய மெருகூட்டலிலும் கருத்தாடலிலும் இணைந்துள்ள திரு, பிரகாஸ் அவர்களுக்கும்
நன்றிகள்
அத்தோடு தோலோடு தோளாக நின்று இதன் வளர்சியில் தன் ஆலோசனைகளையும் உதவிகளையும் புரிந்துவரம் மாவை தங்கராஜா அவர்களுக்கும் நன்றி,
STS தொலைக்காட்சியின் சிறப்புக்காக ஊக்கமளிக்கும், கருத்தாடல் செய்தும் ,நிகழ்வுகளை ஒழுங்கமைக்க உதவி நிற்கும் அரங்கமும் அதிர்வும் கணேஸ் பிரான்ஸ் ஒழுங்கமைப்பு மட்டுமல்ல அரங்கமும் அதிர்வும் நிகழ்வை தயாரித்து இயக்கி எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சிக்காய் தருவதர்க்கும் நன்றிகள்,
STS தொலைக்காட்சியின் சிறப்புக்காக ஊக்கமளிக்கும், கருத்தாடல் செய்தும் ,நிகழ்வுகளை ஒழுங்கமைக்க உதவி நிற்கும் வள்ளுவர் பாடசாலையின் இயக்குனர் பொன்.ஜீவகன் அவர்கள் அவர்களுக்கும் நன்றிகள்
,
STS தொலைக்காட்சியின் சிறப்புக்காக ஊக்கமளிக்கும், கருத்தாடல் செய்தும் ,நிகழ்வுகளை ஒழுங்கமைக்க உதவி நிற்கும் பண்ணாகம்.கொம் கிருஸ்ணமூர்தி அவர்களுக்கும் நன்றிகள்,
நலவாழ்வு சுவிஸ் இவர்கள் நலவாழ்வுக்காண ஒழுங்கமைப்புக்கும் எங்கள் நன்றிகள்
தமிழரசி ஜெயதாசன் லண்டன் கவிஞர் ஆசிரியர் எழுத்தாளர் என பண்முகம் கொண்டவர் 2022 ல் பெண்ணே நீ பேசவா எனும் புது நிகழ்வின் தொகுப்பாளராக இணைந்துள்ளார்
அத்தோடு இத்தனை செயல்பாடுகள் இருந்தாலும் எம்மவர் தனிக்களத்துக்காய் பார்வையாளர்கள், ஆதரவாளர் என்று நீங்கள் இல்லாத பட்சத்தில் எதுவும் இல்லை அந்தவகையில் STSதமிழ்Tv உறவுகளுக்கும் அனுசரணை வழங்கியோருக்கும் வழங்க இருப்போருக்கும் நன்றி கூறி நிற்கின்றனர் STSதமிழ்Tv நிர்வாகம்
அத்தோடு இதன் வளர்சிக்கு தோள் கொடுத்த, கொடுத்துக்கொண்டு இருக்கின்ற, அனைவருக்கும் எமது நிர்வாகம் நன்றிகள் கூறி நிற்கின்றது
எம்மவர் கலைக்கான இத்தளத்தை நீங்கள் உங்கள் படைப்புக்களையும் ஆக்கமுள்ள கருத்துக்களையும் தருவன்மூலம் இதன் வளர்சி இன்னும் மிளிரும், இதன் தனித்துவத்துடன் எமது ஈழக்கலைஞர்களமாக இது என்றும் உலாவரும் என்ற தகவலை எஸ் ரி எஸ் தமிழ் நிர்வாத்தினர்அன்போடு கூறிக்கொள்வதோடு உலகபந்தில் ஈழவர்கலையுடன் வலம்வரும் எஸ் ரி எஸ் தமிழ் என்ற நற்தகவலுடன் இணையுங்கள். பலம் பெருகட்டும் எம் கலை வளம் உலகபந்தில், எஸ் ரி எஸ் தமிழ் நிர்வாகம் நன்றிகள் கூறி நிற்கின்றது
கனாடவில் இயங்கி வரும் ஈகிள் I P Box, ஈகிள் I P Box, நிர்வாக இயக்குனர் தினேஸ் ஆவர்களுக்கு நன்றிகள் எமது தனித்துவம் உள்ள செயல் பாட்டை கண்டறிந்து எமது ஒளிபரப்பை ஈகிள் இணைப்பில் இணைத்தமைக்காக
இப்போது ஈகிள் I P Box,
ஜரோப்பாவில் இயங்கிவரும் இயங்கி வரும்
(V)வீ I P Box , நிர்வாக இயக்குனர் தீரபன் அவர்களுக்கும் அவர் இணை செயல்பாட்டாளர்களுக்கும் நன்றிகள் எமது தனித்துவம் உள்ள செயல் பாட்டை கண்டறிந்து எமது ஒளிபரப்பை (V)வீ I P Box ,இணைப்பில் இணைத்தமைக்காக
கலைஞர்கள் சங்கமத்தில் இன்று பி.குருசுமுத்து இராயப்பு கலந்து சிறப்பிக்கின்றார் . எழுத்தாளர் ,கவிஞர் என பயணிக்கின்ற இவர் தன் செயல்படுகள் பற்றியும் மேடை நிகழ்வுகள் பற்றியும் இனி எடுக்க இருக்கும் முயற்சிகள் என பல விடையங்களையும் பகிந்து கொண்டார்
மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் , யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி.அருணி வேலளகன் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் கதிர் அதிர்வுக்கான மாத்திரை பற்றிய, காரணிகள் பற்றிய தகவலும் தற்கால கொறோனா பற்றிய தவல்களும் அடங்கிய பல சிறப்பான மருத்துவ முறைகளை பற்றிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்
தொப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன்
இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8:00 மணிக்கு நீங்கள் கண்டுகளிக்கலாம்.10 கேள்விகளுக்கு 10 பிரமுகர்களின் பதில்கள், பல நாட்டில் வாழ்பவர்களாகிய அவர்கள் கூறும் பதில்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள்
தொகுப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன்