தாயக நினைவுகளுடன் வாழும் எங்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுகள் நெஞ்சத்தை ரணமாக்கி நிற்கின்றது அந்த வேதனையையும் வலியையும் எடுத்து வரும் பாடலாக முள்ளிவாக்கால் வலி நீங்க சொல்லி நாம் அழுவதெங்கே துயர் நீங்க என்றபாடல் பல்கலை வேந்தர் மயிலையூர் இந்திரன் அவர்களின் குரலிலும் நடிப்பிலும் ஈழத்து இதைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் வரியிலும் இசையலும் STSதொலைக்காட்சியின் தயாரிப்பில் முள்ளிவாய்கால் முற்றுகைக்குள் ள் அனைவருக்கும் சமர்ப்பணம் இப்பாடல்
Autor: stsstudio
,வண்ணத்தமிழே என்றபாடல் 1997ஆம் ஆண்டு ஒலிப்பதிவு 21.04.2023 காணொளியாக வெளிவருகின்றது.
வண்ணத்தமிழே என்றபாடல் கடந்த 1997ஆம் ஆண்டு எஸ்.ரி எஸ் கலையகத்தின் தயாரிப்பில் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ் .தேவராசாவின் இசையில் உருவானதாகும்,
இப்பாடலை அன்று பாடியவர்கள் திருமதி.பெனடிக்ற்ரா டொன்பொஸ்கோ, அடைக்கலசாமி டொன்பொஸ்கோ தம்பதியினர். அதே பாடல் அதே தம்பதியினரால் 21.04.2023 காட்சிப்படுத்தப்பட்டு இன்று வெளிவருகின்றது ,
இதற்கான ஒளிப்பதிவு படத்தொகுப்பு பென்சியா அவர்கள் இவர்திருமதி.பெனடிக்ற்ரா டொன்பொஸ்கோ அவர்களின் புதல்வியாவார்
பாடலாசிரியர் இந்து மகேஸ் அவர்கள்
இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ் .தேவராசா
நீண்ட இடைவெளியின்பின் காட்சியோடு கானமாகவரும் பாடல் காலத்தை கடந்தாலும் திருமதி.பெனடிக்ற்ரா டொன்பொஸ்கோ, அடைக்கலசாமி டொன்பொஸ்கோ தம்பதியினர்அதே பாடகர்களின் கலை ஆர்வத்தின் வெளிப்பாடே இந்தக்காணொளிப்பதிவு இவர்களின் கலைத்தாகத்தின் வெளிப்பாடே இப்பாடல் இவர்கள் போன்றோரை முன் கொண்டு வருவதே எம் நோக்கு ஈழவர்கலையால் முன்நிலை பெற இதுவும் ஒரு எடுத்துக்காட்டு இத் தம்பதயினரின் கலையார்வத்துக்கு எமது வாழ்த்துக்கள் இக் காணொளியை பார்த்து உங்கள் ஆக்க பூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்Share
கவிஞர் கீதா ரவிஅவர்களின் STSதொலைக்காட்சிக்கான வாழ்த்து!
தேவமுல்லைச் செடியின்
ஆழவேர்களின் வளர்ச்சியில்
பெருங்கொடிகள் படர்ந்த
ளுவுளு தொலைக்காட்சிப் பூங்காவனம் !
கொடிகள் முழுவதும் கலைஞர்ப்பூக்கள்
இலைகள் மறைத்த கலைஞர்ப்பூக்களையும்
மணம் பரப்ப வைக்கும் மகோன்னத பூங்காவனம்
ஈழக்கலை நாதம் உலகெங்கும் பரப்பியின்று
ஏழாண்டு அகவையில் நிறைக்கின்றது.
ஏழாண்டு அல்ல இன்னும் எழுநூறு ஆண்டுகள்
ஏறுநடை போடும். ஏராளம் கலைக்குயில்கள்
வான்வெழிக் காணொளியில் பறந்து
வர நேசக்கரம் நீட்டி நீண்ட சேவை
உவந்தளிக்கும்.ளுவுளுவாழிய வாழிய
ளுவுளு தமிழ்தொலைக்காட்சி தேவமுல்லைப்பூங்காவனம்!!! வாழிய வாழிய தேவமுல்லைப் பெருவேர்கள் சேவை வாழிய வாழிய !!!
கலைஞர் வில்லுப்பாட்டு ராஜன் கலைஞர்கள் சங்கமம் நிகழ்வினை பார்த்தேன் பூரிப்படைந்தேன் கணோஷ்
கலைஞர்கள் சங்கமம் நிகழ்வினை பார்த்தேன் பூரிப்படைந்தேன் பழமையான பாரம்பரிய கலைகளுக்கு ஈடுஇணை ஏதுமில்லை இன்றைய கலைஞர் வில்லுப்பாட்டு ராஜன் வில்லுப்பாட்டை காத்துவரும் மாபெரும் கலைஞர் அவர்பாடும் தொனியின் கம்பீரம் அவருக்கு இது ஒருகொடையே கலைமீது நிறைவான காதல் கொண்டு பயணிக்கின்றார் எதையும் நேருக்கு நேர்பேசும் கலையாற்றல் கொண்டவர் என்பதை சிறப்பான நல்லமனிதர் கலைகளை காத்துவரும் பெரியோர்களில் ஒருவர் தொகுப்பாளரின் கேள்விகளுக்கு அழகாகவும் சுவையாக பதிலாகவும் பாடலாகவும் பாடிக்காட்டினார் நிறைவாக கலைஞர்களையும் மதிப்பிட்டிருந்தார் கலைமீதும் கலைஞர்கள் மீதும் நீங்கள் கொண்டிருந்த அன்பைக்காட்டுகிறது STS தொலைக்காட்சியில் எம்மவர்கள் கலைக்கும் கலைஞர்களுக்கும் முன்னுரிமை கெடுத்துவரும் தேவராசா பாராட்டுக்குரிய விடயமாகும் நெறியாளரின் முல்லை மோகனின் நேர்காணலும் வில்லுப்பாட்டு ராஜனின் அழகான கருத்துக்களும் பழமையின் நினைவுகளும் பாராட்டுக்குரியது பழமையான கலைகளும் கலைஞர்களும் மதிக்கப்பட வேண்டும்!
அரங்கமும் அதிர்வு இயக்கு ,கவிஞர் சின்னராசா கணோஷ் பிரான்ஸ்
புதிய வருடமே வருக பாடலை பாடியவர்கள் மயிலையூர் இந்திரன் எஸ்.தேவராசா
புதிய வருடமே வருக பாடல் மயிலையூர் இந்திரன் தேவராசா இணைந்த குரலில் முளுமையான காணொளி01.01.2023 ஒளிப்பதிவு ஒலிப்பதிவு படத்தொகுப்பு பாடல் கலவை எஸ் ரி எஸ் கலைக்கூம்(யேர்மனி) பாடல் ஆக்கம் பேஸ் கிற்றார் லீற் கிற்றார் றிதம்கிற்றார் சுரத்தட்டு மீட்டலுடன் ஒளிப்பதிவு படத்தொகுப்பு இசையமைத்துப் பாடிக் பாடல்காட்ச்சியுடன் இசைக்கவிஞன் சிறுப்பிட்டி எஸ் தேவராசா
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்ச்சி
எம்தேசக் கவிஞர்களுக்கு STS தொலைக்காட்சி ஊடாகச் சந்தர்ப்பம் அளிப்பது மகிழ்வைத்தருகின்றது
. இரா . சம்பந்தன்

திருமதி கீதா ரவி அவர்கள்
புதுக்கவிதைகளில் ஆழுமைமிக்க கவிஞராகத் திகழ்கின்றார் !
அவரின் ஒவ்வொரு கவிதைகளும் மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளாய்
வாழ்வியலைச் சுட்டி நிற்கின்றன ! சொற்கள் சுதந்திரமாகச் சிறகுகள்
விரிக்கின்றன . மிகமிக இயற்கையை நேசிப்பவராகவும் , கவிதை வரிகளில்
தேவையில்லாத அடுக்குவசனங்களை எழுதாமல் அர்த்தமுள்ள கருத்துகளை
உள்ளடக்கி தனது மனவுணர்வுகளையும் சேர்த்து சிறப்பான கவிதைகளை
யாத்தளித் திருக்கின்றார் . அவருக்கு எமது பாராட்டுகள் .
கவிஞர்கள்தரும் கவிதா நிகழ்வினூடாய் இலைமறை காயாய் காணப்படும்
எம்தேசக் கவிஞர்களுக்கு s t s தொலைக்காட்சி ஊடாகச் சந்தர்ப்பம் அளிக்கும்
இசையமைப்பாளரும் , கவிஞரும் , அத்தொலைக்காட்சியின் நிறுவனருமான
திரு . ௭ஸ் . தேவராசா அவர்கட்கும் அவரோடு கைகோர்த்துப் பயணிக்கும்
சிறந்த அறிவிப்பாளரும் , ஒருங்கிணைப்பாளருமான திரு. முல்லை மோகன் அவர்கட்கும் எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும் .
அன்புடன் . இரா . சம்பந்தன்
மாவீரர்பாடல் (தங்கத்தமிழ் மண்ணை) !பாடியவர் V,S ஜெயன் ,இசை ஈழத்து இசைத்தென்றல் :
தமிழீழக்கருவறைள் மீண்டும் உங்களை சுமக்கும் (பாடியவர் மயிலையூர் இந்திரன்)
விழிப்புலன்அற்றவள் வீரகாவிய மாமாக்களை அழைக்கும் பாடல் பாடியவர் செல்வி கலைவாணி.ரவீந்திரசிவம் யேர்மனி

இந்தப்பாடல் மாவீரர்களுக்காண அற்பணம்! எம் இனம்காக்கா எழுந்த தலைவன்- பின் அணியாய் அணியாய் திரண்டு படை எமக்காய் எம் இனத்துக்காய் தன் உயிர் நீர்த்த அந்த தியாகிகளை நினைத்:தபாடல் பாடியவர் செல்வி கலைவாணி.ரவீந்திரசிவம் யேர்மனி பாடலாக்கம் ஒலிப்பதிவு பாடல்கலவை ஒலிப்பதிவு படக்கலவை இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
எங்கள் மாவீரர்களே எழுந்து வாருங்கள் ! பாடியவர் மயிலையூர் இந்திரன் ,இசை எஸ் .தேவராசா

இந்தப்பாடல் மாவீரர்களுக்காண அற்பணம்! எம் இனம்காக்கா எழுந்த தலைவன்- பின் அணியாய் அணியாய் திரண்டு படை எமக்காய் எம் இனத்துக்காய் தன் உயிர் நீர்த்த அந்த தியாகிகளை நினைத்:தபாடல் பாடியவர் மயிலையூர் இந்திரன் குரல் ஒலிப்பதிவு ஒளிப்பதிவு பிரஜீன் பாடலாக்கம் ஒலிப்பதிவு பாடல்கலவை படக்கலவை இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா