கவிஞர் கீதா ரவிஅவர்களின் STSதொலைக்காட்சிக்கான வாழ்த்து!

தேவமுல்லைச் செடியின்
ஆழவேர்களின் வளர்ச்சியில்
பெருங்கொடிகள் படர்ந்த
ளுவுளு தொலைக்காட்சிப் பூங்காவனம் !

கொடிகள் முழுவதும் கலைஞர்ப்பூக்கள்
இலைகள் மறைத்த கலைஞர்ப்பூக்களையும்
மணம் பரப்ப வைக்கும் மகோன்னத பூங்காவனம்
ஈழக்கலை நாதம் உலகெங்கும் பரப்பியின்று
ஏழாண்டு அகவையில் நிறைக்கின்றது.

ஏழாண்டு அல்ல இன்னும் எழுநூறு ஆண்டுகள்
ஏறுநடை போடும். ஏராளம் கலைக்குயில்கள்
வான்வெழிக் காணொளியில் பறந்து
வர நேசக்கரம் நீட்டி நீண்ட சேவை
உவந்தளிக்கும்.ளுவுளுவாழிய வாழிய
ளுவுளு தமிழ்தொலைக்காட்சி தேவமுல்லைப்பூங்காவனம்!!! வாழிய வாழிய தேவமுல்லைப் பெருவேர்கள் சேவை வாழிய வாழிய !!!

About The Author

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert